ஆசியாவிலேயே "பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ்" அதிக நிதி திரட்டியது
யூடுயுப் புகழ் கோபி - சுதாகர் கதாநாயகர்களாக நடிக்கும் கிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிகப்படியான நிதி திரட்டப்பட்ட படம்.
சமுக வலைத்தளமான யூடுயுப் மூலம் பல ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றவர்கள் கோபி - சுதாகர். தனது விடியோக்களில் தனித்துவத்தை காட்டும் இவர்கள் இருவரும், வெள்ளித்திரையில் கதாநாயகர்களாக களமிறங்க இருக்கும் புதிய படத்திற்கும் தனிப்பாதையை தேர்ந்தெடுத்தனர்.
கோபி - சுதாகர் தங்களது தயாரிப்பு நிறுவனத்திற்கு "பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ்" எனப்பெயரிட்டு, பல முன்னனி இயக்குனர்களுடன் பணியாற்றிய SAK எனும் புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கதாநாயகர்களாக கோபி - சுதாகர் நடிக்க ஆயுத்தமாகினர்.
"பரிதாபங்கள்" யூடுயுப் சேனலின் மூலம் தாங்கள் புதிதாக நடிக்கும் படத்திற்கு கிரவுட் பண்டிங் முறையில் நிதி திரட்டப்படவுள்ளதாக அறிவித்தனர்.
அறிவிப்பு விடுத்த நாள் முதல் நிதி மலமலவென்று பெருக ஆரம்பித்தது. இன்று வரை சுமார் 6.3 கோடிக்களுக்கு மேல் கிரவுட் பண்டிங் முறையில் நிதி திரட்டப்பட்டுள்ளது. மேலும் பல நிறுவனங்களும் இப்படத்திற்கு ஸ்பான்ஸர் முறையில் நிதியுதவி அளித்துள்ளது.
ஆசியாவிலேயே அதிகப்படியாக ஒரு படத்திற்கு கிரவுட் பண்டிங் முறையில் நிதியில் பெரும்பான்மை பெற்ற ஒரே படம் இது என்ற புகழை பெற்றுள்ளது.
நிதியளித்த அனைவருக்கும் படத்தை பற்றிய முக்கிய தகவல்களும், மேலும் படம் உருவாகும் ஒவ்வொரு கட்டத்தை பற்றிய தகவலும் அவர்களுக்கென்று ப்ரத்யேகமாக உருவாக்கப்படும் வெப்சைட்டில் இடம்பெறும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். படம் உருவாக தொடங்கிய நாள் முதல் நிதியளித்த அனைவரும் ஒரு தயாரிப்பாளர்களாக தங்களை உணரும் வகையில் அனைத்து தகவல்கள் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
பண்ட் மேலன் ஆப் மூலமாக கிரவுட் பண்டிங் முறையில் நிதி திரட்டப்படுவது முறைப்படுத்தப்பட்டு அனைத்து பண முதலீட்டார்களுக்கு விவரம் அளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது .
இந்த படத்தில் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பிரபல நடிகர்களுடன் தற்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. ஜில் ஜங் ஜக், அவள், பாகுபலி நெட்பிலிக்ஸ் சீரியஸ்களில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நிஜய் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
கோபி - சுதாகர் நடிக்கும் இப்படத்தின் தலைப்பும், நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரமும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.