வின் நியூஸ் தொலைக்காட்சியில்‘வின் வழிகாட்டி’நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது

வின் நியூஸ் தொலைக்காட்சியில்‘வின் வழிகாட்டி’நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது
வின் நியூஸ் தொலைக்காட்சியில்‘வின் வழிகாட்டி’நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது

வின் நியூஸ் தொலைக்காட்சியில் தினந்தோறும் திங்கள் முதல் சனி வரை மாலை 5:30 மணிக்கு ‘வின் வழிகாட்டி’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. தகுதி வாய்ந்த ஆசிரிய பெருமக்கள் பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர்களது சந்தேகங்களை தீர்த்து வைக்கின்றனர். அதைத்தவிர பாடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுப்பது எப்படி, பிளஸ் 2 முடித்தபிறகு எந்த துறையை தேர்ந்தெடுப்பது, கடினமான கேள்விகளுக்கு எப்படி விடை அளிப்பது, பதற்றப்படாமல் தேர்வை எதிர்கொள்வது எப்படி என்பன குறித்து தெளிவாக விளக்குகிறார்கள். இந்த நிகழ்ச்சி மாணவர்கள் மட்டுமன்றி பெற்றோருக்கும் பயனளிக்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை கவிதா வர்தினி தொகுத்து வழங்குகிறார்.