வின் நியூஸ் தொலைக்காட்சியில் “ஐயா ஆபிசர் ஐயா” நிகழ்ச்சி

வின் நியூஸ் தொலைக்காட்சியில் “ஐயா ஆபிசர் ஐயா” நிகழ்ச்சி

வீட்டு வாசலில், தெருவில், ஊரில், சாலையில் என்று மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு ஊடகத்துணையுடன் அதிகாரிகளை தொடர்வு கொண்டு தீர்வு காணும் இணைப்பு பாலமாக வின் நியூஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11:00முதல் 12 :00மணி வரை “ஐயா ஆபிசர் ஐயா” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

புதிய கோணத்தில் புதிய மாற்றத்தோடு வின் நியூஸ் தொலைக்காட்சி செயல் இயக்குநர் ஆர்.பி.யு. ஷியாம் குமார் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொலைபேசி மூலமும் வாட்ஸ்அப் மூலமும் பல பகுதிகளை சேர்ந்தவர்களும் தங்கள் பகுதி குறைகளை சொல்லி தீர்வு கண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் களத்திலே நின்று அப்பகுதி பிரச்னைகளை திரட்டி தீர்வு காண நிருபர் படை செயல்பட்டுவருகிறது. அரசு அதிகாரிகளும் பிரச்னைகளை கேட்டு தீர்வு காண உதவி வருகிறார்கள். மக்கள், அரசு, ஊடகம் என்ற இந்த மூவர் கூட்டணி தீர்வுக்கான இணைப்பு பாலமாக செயல்பட்டு, தொடர்ந்து மக்கள் நலனுக்காக செயல்படுவோம், தீர்வு காண்போம் என்று வின் நியூஸ் தொலைக்காட்சி செயல் இயக்குநர் ஆர்.பி.யு. ஷியாம் குமார் உறுதிகூறுகிறார் .இது ஒரு நிகழ்ச்சி மட்டும் அல்ல மக்கள் நலம் காக்கும் இயக்கமாக மாறும் என்று ஷியாம் குமார் கூறுகிறார்