தமிழரசன் திரைப்படம் மனவருத்தங்களுடன்… சிவா

தமிழரசன் திரைப்படம் மனவருத்தங்களுடன்…  சிவா
தமிழரசன் திரைப்படம் மனவருத்தங்களுடன்… சிவா

தமிழரசன் திரைப்படம்
என் இனிய நண்பர்களுக்கு...
என் வாழ்க்கையில் இதுவரை பலபேருக்கு என்னால் இயன்ற உதவி செய்திருக்கிறேன். நான் அப்படித்தான் வாழ்ந்ததாக கருதினேன். இருந்தாலும் ஏதோ சில பாவங்களையும் செய்திருக்கிறேன். ஏனென்றால் தமிழரசன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு நான் பட்ட வேதனைகள் எண்ணிலடங்காது. வாழ்க்கையில் வெற்று Promisary Note, வெற்று Cheque மற்றும் வெற்று பேப்பர் போன்றவற்றில் நமக்காகவோ மற்றவர்களுக்காகவோ கையெழுத்து போட கூடாது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். நான் 15 ஆண்டுகளுக்கு முன்பு வேறு நபருக்காக போட்ட கையெழுத்து நான் தற்போது படம் வெளியிடும் போது பிரச்சனையாக வந்தது. கடவுள்தான் சில மனிதர்கள்  உருவில்என்னை காப்பாற்றினார். என் வாழ்க்கையில் FEFSI  தலைவராக இருந்தபோது பல திரைப்பட வெளியீட்டு பிரச்சனைகளில் தலையிட்டு சுமூகமாக முடித்து கொடுத்திருக்கிறேன். ஆனால் கூட இருந்து கொண்டே ஏமாற்றுவது, முதுகில் குத்துவது comission வாங்குவது, சந்தர்ப்பம் பார்த்து பழிவாங்குவது போன்ற துரோகங்களை இந்த பட வெளியீட்டின் போது அதிக அளவில் அனுபவித்தேன்.
           என் இனிய நண்பர்களே தயவு செய்து யாருக்கும் வெற்று Promisary Note, வெற்று Cheque மற்றும் வெற்று பேப்பர் போன்றவற்றில் கையெழுத்து போட்டு கொடுத்து விடாதீர்கள். ஏனெனில் இது மனிதர்கள் மட்டுமல்ல மிருகங்களும் வாழும் உலகம். இந்த திரைப்படம் வெளியிடுவதற்காக நான் மீண்டும் வெற்று  Promisary Note, வெற்று Cheque மற்றும் வெற்று பேப்பர் போன்றவற்றில் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கிறேன். என்னை தற்போது காப்பாற்றிய இறைவன் தான் மீண்டும் என்னை காப்பாற்றுவார் என்று நம்புகிறேன். 
மனவருத்தங்களுடன்… 
சிவா  (மன்னிக்கவும்)  FEFSI சிவா