வேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற “ஜோதிட சவால்"நிகழ்ச்சி

வேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற “ஜோதிட சவால்"நிகழ்ச்சி

வேந்தர் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வாரங்களிலேயே மக்களின் ஆதரவைப் பெற்ற “ஜோதிட சவால் “நிகழ்ச்சி .ஜோதிடத்தில் மிகவும் பழைய முறையான அகத்தியரின் ஆசிபெற்ற ஜீவ நாடி ஜோதிடர் பாபு இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக திகழ்கிறார்.ஒவ்வொரு வாரமும் நேயர்கள்  இவரின் வீட்டிற்கு நேரடியாக சென்று, அவர்கள் வீட்டில் அமைப்பை பார்த்தே நேயர்களின்  பெயர்,கடந்த  காலம்,நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை கணித்து கூறி நேயர்களை வியப்பில் ஆழ்த்துகிறார். இந்த வித்தியாசமான ஜோதிட சவால் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கும் இதன்  மறு ஒளிபரப்பு திங்கள்கிழமை காலை 9:00 மணிக்கும் வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பூஜிதா.