உறியடி 2 - விமர்சனம்

உறியடி 2 - விமர்சனம்

வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலை தமிழ்நாட்டில் உள்ள கிராமத்தில் செயல்பட்டு வருகிறது, இந்த ஆலையில் இன்ஜினியரிங் படித்து விட்டு வேலை தேடி வரும் நாயகன் விஜய் குமார் தன்னுடைய நண்பர்களுடன் வேலை சேருகிறார், இந்நிலையில் இந்த தொழில்சாலையில் ஏற்படும் விஷவாயு கசிவால் தன்னுடைய நண்பர் இறக்கிறார், சில நாட்களில் போதுமான பாதுகாப்பு வசதி இல்லாமல், தொழிற்சாலையில் இருந்து விஷவாயு வெளியேறி காற்றில் கலக்கிறது. இதனால், ஊரில் உள்ள மக்கள் பலரும் பாதிப்படைந்து இறக்கிறார்கள். இதில், தன்னுடைய பெற்றோரை இழக்கிறார் நாயகன் விஜய்குமார்.

அதன்பின் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார் விஜய்குமார். இந்த தொழில்சாலையின் முதலாளி துரை ரமேஷுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சி செய்கிறார், தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் நாயகன் விஜய்குமார் வெற்றிபெற்றாரா? இல்லையா? என்பது தான் மீதிக்கதை.

படத்தை இயக்கி நடித்திருக்கும் நாயகன் விஜயகுமார், முதல் பாதியில் துள்ளலான நடிப்பையும், பிற்பாதியில் போராடும் இளைஞராகவும் சிறப்பாக நடித்துள்ளார், கதாநாயகியாக வரும் விஸ்மயா தொழில்சாலையில் பணிபுரியும் டாக்டராகவும், விஜயகுமாரின் காதலியாகவும், மக்களுக்காக போராடும் போராளியாகவும் நடிப்பில் தேர்ச்சி பெறுகிறார். படத்தின் பெரிய பலம் இசை, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுக்கு பாராட்டுகள்.

மொத்தத்தில் ‘உறியடி 2’ சமூக பிரச்சனையை சிறப்பாக கையாண்டுள்ள இயக்குனர் விஜய் குமார், வெற்றி பெற்றுள்ளார்.