மறைந்த தயாரிப்பாளர் கே பாலாஜி பற்றிய ருசிகர செய்திகள்

மறைந்த தயாரிப்பாளர் கே பாலாஜி பற்றிய ருசிகர செய்திகள்

சிவாஜி, ரஜினி, கமல் இவர்களை வைத்து ஏராளமான வெற்றிப் படங்களை தனது சுஜாதா சினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர், மறைந்த நடிகர்- தயாரிப்பாளர் கே. பாலாஜி.

அதில் பெரும்பாலான படங்களை  ( ஜனவரி-26 ) ரிலீஸ் செய்வார். இது அவருடைய கல்யாண நாள். 

கே. பாலாஜி அவர்களைப் பற்றி இன்னும் சில செய்திகள் :

இவருடைய மகள் சுசித்ரா தான் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மனைவி. 

நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் அம்மா ராஜலட்சுமி ( திருமதி ஒய்.ஜி.பி ), இவருடைய உடன் பிறந்த அக்கா.

ஒருவகையில் ரஜினி, மோகன்லால், பாலாஜி, ஒய்.ஜி. மகேந்திரன் எல்லோருமே உறவினர்தான்...