பிக்பாஸ் 4-வது சீசன் வெளியேறிய பின்பு ரேகா வெளியிட்ட கண்ணீர் பதிவு

பிக்பாஸ் 4-வது சீசன்  வெளியேறிய பின்பு ரேகா வெளியிட்ட கண்ணீர் பதிவு
பிக்பாஸ் 4-வது சீசன் வெளியேறிய பின்பு ரேகா வெளியிட்ட கண்ணீர் பதிவு

பிக்பாஸ் 4-வது சீசன்  வெளியேறிய பின்பு ரேகா வெளியிட்ட கண்ணீர் பதிவு 


தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் கடந்த 4-ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் ஆரி, பாடகர் வேல்முருகன், சனம் ஷெட்டி, ரேகா, கேப்ரியலா, ஆஜித், சம்யுக்தா, சோம் சேகர், சுரேஷ் சக்கரவர்த்தி, ஷிவானி, ஜித்தன் ரமேஷ், ரியோ உள்ளிட்ட 16 போட்டியாளர்களுடன் 17-வதாக விஜே அர்ச்சனா இணைந்திருக்கிறார்.

முதல் வாரத்தில் யாரும் வெளியேற்றப்படமாட்டார்கள் என்று பிக்பாஸ் அறிவிக்க போட்டியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் 2-வது வாரம் ஒருவர் வெளியேற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு ரேகா, சனம் ஷெட்டி, ரம்யா, ஷிவானி, சம்யுக்தா, கேப்ரியலா உள்ளிட்டோர் எலிமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றனர். இவர்களில் நடிகை ரேகா நேற்று வெளியேற்றப்பட்டார்.

ரேகா வீட்டை விட்டு வெளியேறப்போகும் செய்தி அறிந்து ரியோ, பாலாஜி, ஷிவானி உள்ளிட்டோர் கண்ணீர் விட்டனர். மற்ற போட்டியாளர்களும் சோகமாகினர். வீட்டில் இருந்து செல்லும் முன்னர் பிக்பாஸ் கட்டளையின்படி செடி ஒன்றை ரியோவுக்கு கொடுத்த ரேகா, அவருக்கான உண்டியலை ஷிவானிக்கு கொடுத்து அங்கிருந்து விடைபெற்றார்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் நடிகை ரேகா தனது இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ள முதல் பதிவில், “தான் மிகவும் மிஸ் செய்வது ஷிவானி மற்றும் பாலாஜியைத் தான்” என்று கூறியுள்ளார்.

ரேகாவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே செல்லுங்கள் என ரேகாவிடம் கூறியுள்ளனர்