அமெரிக்காவில் வஸந்தின் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்"

அமெரிக்காவில் வஸந்தின் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்"

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறும் சர்வதேச திபுரான் திரைப்பட விழாவிலும் மற்றும் நியூயார்க் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட இயக்குனர் வஸந்தின் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" தேர்வாகியுள்ளது. தொடர்ந்து பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட பட்டுகொண்டிருக்கும் இத்திரைபடத்திற்க்கு திரைப்பட விழாக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச திரைப்பட விழா, பூனே சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழாவில் தேர்வுசெய்யப்பட்டு வெளியாகியுள்ளது. சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கபட்டுள்ளது. 

இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி , காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ”மயக்கம் என்ன“ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரத்யோகமாக பின்னனி இசை இல்லாதாது மும்பை திரைப்பட விழாவில் பாராட்டு பெற்றது குறிப்பிடத்தக்கது.  

எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி இயக்குனர் வஸந்த் எஸ் சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

Sivaranjaniyum innum sila pengallum World premiere Public Review:  https://www.youtube.com/watch?v=SheNN0UUQTI