பட தோல்வியினால் நான் விழுந்து விடமாட்டேன்: சிவகார்த்திகேயன்

பட தோல்வியினால் நான் விழுந்து விடமாட்டேன்: சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’திரைப்படத்தின் பாடல் வெளியீடு விழாவில் பேசியதாவது: "என்னுடைய முந்தைய படம் சரியாக ஓடவில்லை. அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஒரு படம் ஓடவில்லை என்பதற்காக விழுந்து விடமாட்டேன். தொடர்ந்து வெறியோடு ஓடிக்கொண்டே இருப்பேன். எனது அடுத்தடுத்த படங்கள் மக்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும், தோல்வியிலும் என்னுடன் இருக்கும் ரசிகர்கள் தான் எனக்கு பலம்.”