புதுயுகம் தொலைக்காட்சியின் பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம்
புதுயுகம் தொலைக்காட்சியின் பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் மதுரை மாநகரில் மகாகவி பாரதியார் தமிழாசிரியராக பணியாற்றிய சேதுபதி மேனிலைப் பள்ளியில் மிகச்சிறப்பாக நடந்தேறியது. இலக்கியப் பேச்சாளர் திரு. நாஞ்சில் சம்பத் அவர்களின் தலைமையில் பண்டிகைக் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சி என்பது குடும்பத்துடனா? நண்பர்களுடனா? என்ற தலைப்பில் பட்டுக்கோட்டை பாஸ்கர், சிங்கப்பூர் கண்ணன் சேஷாத்திரி, திரு. சீதாராமன் நண்பர்கள் அணியிலும், மங்கையர்க்கரசி, வேம்பு பாலா, அஞ்சலி குடும்பம் அணியிலும் தங்களுக்கே உரித்தான நகைச்சுவை நையாண்டி பேச்சால் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சி வரும் பொங்கல் அன்று புதுயுகம் தொலைக்காட்சியில் காலை 11:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது .