ஜுராசிக் வேல்டு படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

ஜுராசிக் வேல்டு படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு
ஜுராசிக் வேல்டு படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

ஜுராசிக் வேல்டு படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

 

ஸ்பீல் பெர்க் இயக்கிய ஜுராசிக் பார்க் படங்களுக்கு வரவேற்பு கிடைத்ததால் அந்த படங்களின் தொடர்ச்சியாக ஜுராசிக் வேல்டு படம் தயாரானது. கோலின் ட்ரெவாரோ இயக்கத்தில் கிறிஸ் ப்ராட் நடித்த இந்த படம் திரைக்கு வந்து உலகம் முழுவதும் நல்ல வசூல் குவித்தது. ஜுராசிக் வேல்டு படங்களின் 2 பாகங்கள் ஏற்கனவே வந்துள்ளன. மூன்றாம் பாகமாக ‘ஜூராசிக் வேல்டு: டாமினியன்’ தயாராகி வருகிறது.


இதன் படப்பிடிப்பை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினர். 2021-ம் ஆண்டு மே மாதம் படம் வெளியாகும் என்றும் அறிவித்தனர். ஆனால் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் கொரோனா பரவியதால் நிறுத்தப்பட்டது. கடந்த ஜூலை மாதம் லண்டனில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா காரணமாக ‘ஜுராசிக் வேல்டு: டாமினியன்’ படம் மீண்டும் 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக இயக்குனர் கோலின் ட்ரேவாரோ தெரிவித்து உள்ளார். படத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு செல்ல திறமையான குழுவினருடன் பணியாற்றி வருகிறேன். ஆனாலும் படத்துக்கு இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டி உள்ளது.