பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது “கீதை காட்டும் பாதை” என்கிற புத்தம் புதிய நிகழ்ச்சி
கண்ணபிரான் குருசேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்தான். அதை நாம் அறிவோம்.18 அத்தியாயங்கள், 700 சுலோகங்கள் கீதையில் உள்ளன. அவற்றின் பொருளை தமிழிலே, அந்த கீதை சுலோகங்களுக்கு இணையான தமிழ் வெண்பாக்களோடு சேர்த்து இந்த நிகழ்ச்சியில் நாம் அனுபவிக்க உள்ளோம்.
பெப்பர்ஸ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 7:40 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை டாக்டர் உ .வே .வேங்கடேஷ் தொகுத்து வழங்குகிறார் .