‘பீச்சாங்கை’ புகழ் கார்த்திக் நடிக்கும் ‘சைரன்’ திரைப்படத்தின் முதல் சிங்கள் இன்று வெளியீடு

‘பீச்சாங்கை’ புகழ் கார்த்திக் நடிக்கும் ‘சைரன்’ திரைப்படத்தின் முதல் சிங்கள் இன்று வெளியீடு

குணா பாலசுப்ரமணியன் இசையில், Muttamiz மற்றும் மோகன் ராஜா வரிகளில் "நீ மட்டும் போதும்" first சிங்கள் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகிறது..

Vinz Production சார்பில் ராஜா ராஜேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சைரன்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் மிலன் மேத்யூ இயக்கியுள்ளார். ‘பீச்சாங்கை’ புகழ் ஆர்.எஸ்.கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, அய்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிளாக் பாண்டி, மாரிமுத்து, வழக்கு எண் முத்துராமன், ஜி.எம்.சுந்தர், முருகானந்தம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பாடல்களுக்கு குணா பாலசுப்ரமணியன் இசையமைத்துள்ளார்.. ஒளிப்பதிவை ரவீந்திரன் மேற்கொள்ள : படத்தொகுப்பை பவன் ஸ்ரீகுமார் கவனிக்கிறார். பின்னணி இசை : அஸ்வமித்ரா, ஸ்டண்ட் : ஓம் பிரகாஷ், கலை: டீ ஜே. வசனம் : சோமசுந்தரம்..

சமீபத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் lyrical வீடியோ இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகிறது.