பாட்டுத்தமிழைமீட்டெடுப்போம் கலைப்படையோடுவருகிறேன் - கவிஞர்வைரமுத்து

பாட்டுத்தமிழைமீட்டெடுப்போம் கலைப்படையோடுவருகிறேன்  - கவிஞர்வைரமுத்து
பாட்டுத்தமிழைமீட்டெடுப்போம் கலைப்படையோடுவருகிறேன் - கவிஞர்வைரமுத்து

பாட்டுத்தமிழைமீட்டெடுப்போம்
கலைப்படையோடுவருகிறேன்

- கவிஞர்வைரமுத்து


90 ஆண்டுகளுக்குமுன்னால்பேசும்படம்தோன்றியபோதுஅதுபாடும்படமாகவேபிறந்தது. வசனங்களைவிடப்பாடல்களேவரவேற்கப்பட்டன. பாடகனாகத்திகழ்ந்தவனேநடிகனாகக்கொண்டாடப்பட்டான். இதிகாசம் – புராணம் – இலக்கியம் - வரலாறு – சமூகம் – சீர்திருத்தம் – சமயம் – போராட்டம்எல்லாமேபாடல்வழியேதான்பரிமாறப்பட்டன.
தமிழர்களுக்குப்பாட்டுஎன்பதுகலைக்கருவிமட்டுமன்று; கற்பிக்கும்கருவி. தமிழர்களின்காதல்,வீரம் – விழுமியம், பண்பாடு - பக்தி – பாரம்பரியம் –பொதுவுடைமை –பகுத்தறிவு –தேசியம் –திராவிடம் -குடும்பம் - தத்துவம், வெற்றி – தோல்வி, நம்பிக்கை – நிலையாமை, இறந்தகாலம் – எதிர்காலம்எல்லாவற்றையும்பள்ளிசெல்லாமலேகற்றுக்கொடுக்கும்பாடப்புத்தகமாகப்பாட்டுப்புத்தகம்திகழ்ந்தது. பாடல்களுக்குமத்தியில்கலைக்களைகளும்முளைத்திருக்கின்றனஎன்றபோதிலும்தமிழர்களின்ஒருநூற்றாண்டுவாழ்வின்வழியேதிரைப்பாடலும்தடம்பதித்தேவந்திருக்கிறதுஎன்பதைப்பண்டிதஉலகம்கூடமறுதலிக்கமுடியாது. தொல்லிசைஅறிந்தபாவாணர்களும், பழந்தமிழ்அறிந்தபாவலர்களும், தங்கள்ஊனினைஉருக்கிஉள்ளொளிபெருக்கித்திரையிசையைஉயர்த்தியிருக்கிறார்கள்.
வாழைப்பழத்தைஏழைகளின்ஆப்பிள்என்பார்கள். திரைப்பாடலைப்பாமரர்களின்கவிதைஎன்றேஅழைக்கலாம். செவியுடையோர்க்கெல்லாம்செழுந்தமிழைஅள்ளித்தந்ததுதிரைப்பாடல். சங்கஇலக்கியத்தையும், சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும், நாயன்மார்பதிகத்தையும், ஆழ்வார்பாசுரத்தையும், கம்பர்தமிழையும், குற்றாலக்குறவஞ்சியையும், காவடிச்சிந்தையும், பாரதி - பாரதிதாசனின்புரட்சித்தமிழையும்தமிழர்கள்உலவியதெருக்களில்கொண்டுவந்துகொட்டியதுதிரைப்பாடல்தான். ஆகவேதமிழகமே! திரைப்பாடல்களைஇடக்கைகொண்டுஎள்ளித்தள்ளாதே. அதிலும்குறைகள்உண்டு. குறைகளைந்துநிறைகாண்பதேநிறைமாந்தர்செய்கை. இப்படித்தமிழர்களுக்குக்காலங்காலமாய்க்கவிதைச்சேவைசெய்ததிரைப்பாட்டு,இந்தத்தொழில்நுட்பயுகத்தில்பாறையில்விழுந்தகண்ணாடிப்பந்தாய்உடைந்துநொறுங்கிச்சிதறிக்கிடப்பதுகண்டுஒருகலைஞனாகஅல்லஒருகலையன்பனாகவருந்திநிற்கிறேன்.
அண்மைக்காலங்களில்சிறந்தபாடல்களேவரவில்லைஎன்றுசொல்லமாட்டேன். நல்லபாடல்கள்எண்ணிக்கையில்குறைந்துவிட்டனஎன்றுஎண்ணமுடைகிறேன். திரைப்பாடல்கள்கவலைக்கிடமாய்க்கிடப்பதற்குக்கலைஞர்கள்மட்டுமாகாரணம்? இசையமைப்பாளர்கள்யாரும்இளைத்துவிடவில்லை; இயக்குநர்களுக்கும்தேடல்இல்லாமல்இல்லை.பாடலாசிரியர்கள்எண்ணிக்கையும்பல்கித்தான்இருக்கிறது. பிறகுஏனிந்தப்பின்னடைவு? காலமாற்றம், வாழ்வைஉடைத்தெறியும்தொழில்நுட்பம், காதல்வெறும்உறுப்புகளின்உறவுஎன்றுவீழ்ந்துகிடக்கும்விழுமியம், கூட்டுக்குடும்பங்களின்உடைசல், நுகர்வுக்கலாசாரத்தின்சுத்தச்சுயநலம், மனிதர்களைத்தீவுகளாக்கிவிடும்சுயசார்புத்தனிமை, குறைந்துபோனபடத்தின்நீளம், பாடல்களைத்தாங்கிச்சுமக்கத்தோள்கள்இல்லாதகதைகள், பாடல்களைச்சகித்துக்கொள்ளாமல்நொறுங்கிப்போனபொறுமை, ரசிகனைக்கட்டிப்போடாமல்நறுங்கிப்போனதிறமை, பயிற்சிஇல்லாதவர்களின்முயற்சிமற்றும்முயற்சிஇல்லாதவர்களின்தளர்ச்சி, இலக்கியஎண்ணெய்விட்டுத்தாளிக்கத்தெரியாதகலை, கலைஇலக்கியப்பயிற்சியற்றமக்களின்கந்தல்மனநிலை, இசைஎன்றபெயரில்நிகழும்சப்தங்களின்வன்முறை, இணக்கமில்லாதஇசையோடுமொழியின்வல்லுறவு, தங்களுக்குஎழுதப்படும்பாடல்களில்என்னநிகழ்கிறதுஎன்பதைக்கண்டறியமுடியாதகலைஞர்கள், நடிகைகளின்பொருளறியாதவாயசைப்பு, தமிழைப்பின்னுக்குத்தள்ளிவிட்டுத்தாளங்களுக்குஅசையும்சதைகள், சிலபாடல்களுக்குமொழியேதேவையில்லையோஎன்றுகுழப்பமடையும்என்னைப்போன்றபாடலாசிரியர்கள்- இந்தக்காரணங்களால்சிகரத்தில்இருந்ததிரைப்பாட்டுபள்ளத்தைநோக்கிப்பரபரவென்றுசரிந்துகொண்டேஇருக்கிறது.
இந்தக்கவலைக்கிடத்தைஎப்படிக்கண்டும்காணாதிருப்பது?திடமெடுத்ததினவும், உள்ளத்தின்தீராததீயும், தணியாததமிழ்ச்சினமும், அணையாதஅறச்சீற்றமும், இன்னும்சாதிக்கவேண்டும்என்றதகிப்பும், தமிழர்களின்வாழ்வில்தமிழ்தீர்ந்துவிடக்கூடாதுஎன்றபச்சைப்படபடப்பும், தமிழர்களின்முற்போக்கைமுன்னெடுத்துச்செல்லவேண்டுமென்றமுனைப்பும், ஏதாவதுசெய்வைரமுத்துஎன்றுதூங்கவிடாமல்என்இமைகளைத்துண்டித்துக்கொண்டேஇருக்கின்றன.
தமிழ்சினிமாமீண்டெழுகிறபோதுஎல்லாரும்கூடித்தமிழின்உயரத்தைஉறுதிசெய்யவேண்டும்அல்லதுதிரைப்பாட்டுக்குவெளியேதமிழர்களின்கலைத்தமிழ்த்தேவையைநிறைவுசெய்யவேண்டும்.
கொரோனாகாலத்தின் 9 மாதங்களும்என்னைஉறங்கவிடாதமாதங்கள். அதில்இந்தக்கேள்வியின்பதிலுக்காகஎன்உயிரைஉருக்கிஉழைத்திருக்கிறேன். 
பூனைக்குநான்கட்டப்போகும்சிறுமணிஇது. தமிழின்புதியராஜபாட்டையைமெல்லத்திறக்கிறேன்;ஒருதலைமுறையேஅதில்பயணம்போகலாம். சற்றுப்பொறுங்கள்!நல்லசெய்தியோடும்நல்லதமிழோடும்ஒருகலைப்படையோடும்உங்களைச்சந்திக்கவருகிறேன்.