நியுஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் 33% (முப்பத்தி மூன்று சதவிகிதம் )நிகழ்ச்சி

பெண்கள் 3 பேர் சேர்ந்தால் அடுத்த வீட்டு கதை, புரணி, வெட்டிக் கதை பேசுதல்  இல்லைனா உடைகள், நகைகள் இவை தவிர அவர்களுக்கு என்ன தெரியும்,  பெண்களுக்கு அரசியலில் என்ன பெரிய புரிதல் இருக்கிறது என்ற கேள்வி இங்கு பொதுவாகவே முன்வைக்கப்படுவதுண்டு. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக நியுஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 1.30 மணிக்கு 33% என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

 செய்தியாளர்கள்  சுகிதா, சிவசங்கரி மற்றும் சரயூ  ஆகியோர் இணைந்து தேர்தல் நடப்புகளை , சமகால அரசியலை, சமூகத்தின் தற்போது நிலவும் கொரோனா  அவலங்களை, அறிவியல் புதுமைகளை, மனித உரிமை சார்ந்த விவகாரங்களை சுவாரசியமாகவும், அரசியல் புரிதலோடும் அலசுகின்றனர். இது வரை 3 பெண்கள் சேர்ந்து அரட்டை மூலம் செய்திகளை அலசுவது போன்ற பல நிகழ்ச்சிகள் வந்திருந்தாலும் அதில் அரசியல் புரிதல் என்பது கிசுகிசு என்ற அளவிலேயே இருந்தது. ஆனால் 33% என்ற பெயரிலேயே சமூகத்தில், அரசியலில், மாற்றங்களை விதைப்பதில் பெண்களின் பங்களிப்பை ஆக்கப்பூர்வமாக முன்னிறுத்துவது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.