NGK - விமர்சனம்
சூர்யா இயற்கை விவசாயத்தை ஊக்கவித்துக்கொண்டே, ஊர் மக்களுக்கு நல்லது செய்து வருகிறார். இப்படி சூர்யா நல்ல பெயர் வாங்குவது எம்.எல்.ஏ இளவரசுக்கு பிடிக்கவில்லை இருந்தாலும் அவருடைய நல்ல பெயரை அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்து தலைவர் பொன்வண்ணன் முன்னிலையில் கட்சியில் சேர்கிறார் அரசியலில் நுழைந்த பின் தான் அரசியல் ஆட்டங்கள் தெரிகிறது, தொண்டனாக இருந்தால் பிரோஜயணம் இல்லை தலைவராக இருக்கவேண்டும் என்று முடிவெடுக்கிறார். இந்நிலையில் ஆளும் கட்சி மந்திரியின் செக்ஸ் வீடியோ அவருக்கு கிடைக்கிறது. அதை வைத்து அவர் தலைமை பொறுப்புக்கு வருகிறார், இதற்கு பின்பு என்னவாகிறது என்பது தான் NGK.
அரசியலில் நடக்கும் அத்தனை சங்கதிகளுடன் சேவை செய்யும் இளைஞர்கள் சந்திக்கும் சங்கடங்களை பின்னணியாக வைத்து கதை உருவாகியுள்ளார் செல்வராகவன்.
சூர்யா தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். தொண்டர்கள் முதல் தலைவர் வரை வரும் காட்சிகளில் உணர்வுபூர்வமாக நடித்து பாராட்டு பெறுகிறார், சண்டை காட்சிகளிலும் அசத்துகிறார்.
சாய் பல்லவி சூர்யாவின் மனைவியாக நடித்து இருக்கிறார். ரகுல் பரீத் சிங் அரசியலை ஆட்டிபடைக்கும் கார்ப்பரேட் அதிபராக வருகிறார், அதிபராக இருப்பவர்கள் எப்படியெல்லாம் இருப்பார்கள் எப்படியெல்லாம் இருப்பார்கள் என்பதை உணர்ந்து நடித்துள்ளார். மற்றும் தேவராஜ், நிழல்கள் ரவி, உமா பத்மநாபன், தலைவாசல் விஜய், வேல ராமமுர்த்தி ஆகியோர் அவரவர் கதாபத்திரத்திற்குகேற்ப நடித்துள்ளனர்.
சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவும், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் படத்திற்கு பலம், அரசியலில் நடக்கும் அவலங்கள் என்று கதை களத்தை பின்னணியாக வைத்து தனக்கே உரித்த தனி பாணியில் இயக்கியிருக்கிறார் செல்வராகவன்.