133 மில்லியனுக்கும் அதிகமானப் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்த பிரபல இசையமைப்பாளர்!
கடந்த சில வருடங்களாக எல்லா நடன மேடைகளிலும் தவறாமல் இந்த இரண்டு பாடல்கள் இடம்பெற்று வருகிறது. ஒன்று 'ஹரஹர மகாதேவகி' பாடல், மற்றொன்று 'ஹே சின்ன மச்சான்' பாடல். பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் தான் இந்த இரண்டு பாடல்களுக்கும் இசையமைப்பாளர்.
இவர் இசையமைத்த இந்த இரண்டு பாடல்களும் இந்தியாவின் தலைசிறந்த நடன இயக்குநர்களான பிரபுதேவாவையும் லாரன்ஸையும் அசுர நடனம் ஆட வைத்தது. மாஸ்டர்களையே அந்த அளவுக்கு ஆட வைத்த பாடல் ரசிகர்களை சும்மாவா விட்டுவைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் இந்த இரண்டு பாடல்களும் இன்றளவிலும் பெரிதும் ரசிக்கப்பட்டு யூடியூப்-ல் 133 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இவரது இசையில் உருவான அடுத்தடுத்த படங்களின் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. அந்தப் பாடல்களும் நடன மேடைகளை அதிர வைக்க போகும் என்று ஆவலோடு காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.
                        
                    
                    


        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        