மருத்துவமும் மனிதாபிமானம்

மருத்துவமும் மனிதாபிமானம்

மலேசிய அழகியும் இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த மருத்துவரான நிஷா தயானந்தன்.கொரோனா சிகிச்சைப் பணியுடன் மனிதாபிமான உதவிகளையும் செய்து வருகிறார்.

கடந்த ஆண்டு மிஸ் வேல்டு மலேசிய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பத்ரா ஜெயாநகர மருத்துவமனை ஒன்றில் முதன்மை மருத்துவர்களில் ஒருவராகப் பணியாற்றுகிறார்.

தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் நிஷா கோலாலம்பூர் மற்றும் சிராம்பான் வட்டாரத்தைச் சேர்ந்த எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்துவருகிறார்.

தங்களைப் போன்ற மருத்துவப் பணியாளர்கள் கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காக்கப் போராடி வருகிறோம் எனவே மக்கள் வீட்டிலேயே இருந்து தங்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.