பத்து லட்சம் பார்வைகளை கடந்த "தேனிசை தென்றல் தேவா" குறளில் "மாஸா மெரினா" பாடல்
பத்து லட்சம் பார்வைகளை கடந்த "தேனிசை தென்றல் தேவா" குறளில் "மாஸா மெரினா" பாடல்
கானா என்றாலே தேவாதான்.. சலோமியா, சலாமுகுலாம்னு கலக்குனவரு... கடைசியா ஜித்துஜில்லாடினு தெறியா வந்தாரு... இப்ப வேற மாறி ..வெறியா மறுபடியும் பாடி இருக்காரு... படம் பேரு டைனோசர்ஸ் ... தமிழ பத்தியும்.. தமிழத்தின் கடந்த 5 வருட நிலைமையையும்..பாட்டு புட்டு,புட்டு வெக்குது... பாட்டு படத்துமேல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது ஒரு மில்லியன் (பத்து லட்சம்) பார்வைகளை இந்த பாடல் கடந்துள்ளது.
இப்படத்தை புதுமுக இயக்குநர் எம் ஆர் மாதவன் இயக்குகிறார். இவர் இயக்குநர் சுராஜின் உதவி இயக்குநர், மேலும் பல இயக்குநர்களிடம் கதை விவாதங்களில், திரைக்கதை அமைப்பில் கலந்து திரை அனுபவம் பெற்றவர்.அவர் இயக்கியுள்ள படம்தான் இந்த ‘டைனோசர்ஸ்’. இது ஒரு கேங்ஸ்டர் கதை.
இதுவரை சிறுத்தை, புலி, சிங்கம் என்ற வார்த்தைகள்தான் படப்பெயர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் ‘டைனோசர்ஸ்’ என்று ஏன் வைத்திருக்கிறார்கள் என்பது படம் பார்க்கும் போது புரியும் என்கிறார்கள்.
படத்தின் கதைக்களமும் பின்புலமும் பிரமாண்ட தன்மை கொண்டவை.
இந்தப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய்பிரியா, யாமினி சந்தர் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 
இப்படத்தில் 120 பேர் வசனங்கள் பேசி நடித்து இருக்கிறார்கள்.
ஒவ்வொருவரையும் புதுமையான சித்தரிப்பின் மூலம் மனதில் நிற்கும் படியான பாத்திரங்களாக அமைத்துள்ளார் இயக்குநர் M R மாதவன்.
இப்படத்தை கேலக்ஸி பிக்சர்ஸ் (Galaxy Pictures) சீனிவாஸ் சம்பந்தம் தயாரிக்கிறார்.
                        
                    
                    


        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        