அஜயன் பாலாஇயக்கத்தில தாஜ்நூர் இசையில் கிட்ஸ் Vs கொரோனா
அஜயன் பாலாஇயக்கத்தில
 தாஜ்நூர் இசையில்
கிட்ஸ் Vs கொரோனா : 
டான்ஸ் மாஸ்டர் ஆகும் ஸ்டண்ட் மாஸ்டர்
மாஸ்டர் வில்லன் நடிகர் ஸ்டண்ட் சில்வாவின் பாப் சிங்கர் அவதாரம்
பொங்கலுக்கு வருகிறது புதிய கொரொனா எதிர்ப்பு இசை
கொரோனா போய்விட்டது என சிலரும்.. இல்லை இல்லை உருமாறிய கொரொனா வால் பெரும் அழிவு காத்திருக்கிறது என வேறு சிலரும் உலகம் முழுக்க பேசிக்கொண்டிருக்கின்றனர். இது இப்படியிருக்க தமிழ்நாட்டில்   மாஸ்டருக்கு  100 சதவிகிதமா 50 சதவிகிதமா என சினிமா குறித்து வேறு சிலரும் அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்றனர்
இப்படி எல்லோருமே பெரியவர்களுக்கான விஷயமாய் யோசிக்கும் வேளையில் கொரொனாவால்  உலகம் முழுக்க குழந்தைகளின் எதிர்காலம் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதை நாம் கவனிக்க தவறிவிட்டோம்  பள்ளி வாழ்க்கையில் அவர்களுக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய கல்வியைத்தாண்டி நட்பு  விளையாட்டு மற்றும் அவர்களது காலத்தில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனுபவங்கள் பெருமளவு கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன நாங்கள் உருவாக்கியிருக்கும் இசைப் பாடல்  கிட்ஸ் Vs கொரோனா : பிரபஞ்சத்தை காக்கும் பேரிசை    மூலம் இந்த உலகுக்கு சொல்ல வருவது இதைத்தான்
வெறும் குழந்தைகளின் உலகம் பற்றி பேசுவதோடு நில்லமால் உலகம் முழுக்க மனித நேயம் வற்றிப்போய் இனம் மொழி மத வேற்றுமைகள் அதிகரித்துவிட்டதும்   குழந்தைகளின்   மீது  நாடுகள் தொடுக்கும்  வன்முறையும் ,  இயற்கையை அழித்தொழிக்கும்  மனிதனின் சுய நலமும்  என பல முனைகளில் கொரானாவுக்கான காரணங்களை அலசுகிறது இப் பாடல்  
தாஜ்நூர் இசையில் ரமேஷ் வைத்யா   வரிகளில்  . அஜயன்பாலா இயக்கத்தில்  நடிகர் ஸ்டண்ட்சில்வா  சிறப்புத்தோற்றத்தில் குழந்தைகளுடன் ஆடிப்பாட உருவாக்கியிருக்கிறது கிட்ஸ் Vs கொரோனா : பிரபஞ்சத்தை காக்கும் பேரிசை எனும்     துள்ளல் இசை காணோளி  ஆல்பம். இது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரும் தை பொங்கலன்று  வெளியாகவிருக்கிறது . கனடாவைச்சேர்ந்த  சீனிவாசன் சோம சுந்தரம் தனது  Ts Film productions,Canada  சார்பில் இதை தயாரித்துள்ளார்
                        
                    
                    
                    
                    


        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        