ஜெயலலிதாவாக நடிக்கும் புகைப்படங்களை வெளியிட்ட கங்கனா

எம்.ஜி.ஆராக அரவிந்தசாமியும், சசிகலாவாக பூர்ணா, ஜானகி ராமச்சந்திரனாக மதுபாலா ஆகியோரும் நடிக்கின்றனர். விஜய் இயக்குகிறார். கொரோனா பரவலுக்கு முன்பே இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது. ஊரடங்கு தளர்வை தொடர்ந்து தற்போது மீண்டும் ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். ஜெயலலிதா நினைவு நாளையொட்டி கங்கனா ரணாவத் தலைவி படத்தில் ஜெயலலிதா தோற்றத்தில் நடிக்கும் தனது புகைப்படங்கள் சிலவற்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். “ஜெயலலிதா அம்மாவின் நினைவு தினத்தில் தலைவி படத்தில் இருந்து சில புகைப்படங்களை பகிர்கிறேன். எனது குழுவினருக்கும், டைரக்டர் விஜய்க்கும் நன்றி. படப்பிடிப்பு முடிய இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ளது. உலகம் நடிகைகளை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிய நமது புரட்சித் தலைவி அம்மாவின் நினைவு நாளில் மலர் அஞ்சலி செலுத்த பெருமைப்படுகிறேன். பெண்மையை போற்றுவோம்” என்ற பதிவுகளையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகிறது.