கலைஞர் தொலைக்காட்சியில் இளம் பேச்சாளர்களுக்கான மேடை –“பேச்சுத் திருவிழா”- சீசன் 2 ஆரம்பம்!!
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ‘பேச்சுத் திருவிழா’ நிகழ்ச்சியின் முதல் சீசன் சமீபத்தில் முடிந்த நிலையில், அதன் இரண்டாவது சீசன் பிரம்மாண்டமாக துவங்கி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனைப் போலவே இந்த சீசனிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது பேச்சுத் திறமையை நிரூபித்து வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த பேச்சாளராக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், பிரம்மாண்டமான இறுதிப் போட்டியில் பங்கேற்று தங்களது பேச்சுத் திறமையை வெளிப்படுத்துவார்கள். இந்த இறுதிப் போட்டியின் முடிவில் தமிழகத்தின் சிறந்த இளம் பேச்சாளர் யார் என்பது அறிவிக்கப்படும்.
திண்டுக்கல் ஐ. லியோனி நடுவராக பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, ஞாயிறுதோறும் காலை 10:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, போட்டி நடத்தப்படும் ஊர்களின் சிறப்பு குறித்த வீடியோ ஒன்றும் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, பேச்சின் மீதான நாட்டம் மக்களிடையே குறைந்து வரும் நிலையில், அதனை ஊக்குவிக்கும் விதமாக ஒளிபரப்பாகும் பேச்சுத் திருவிழா நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்.