பிரம்மாண்டமான பேச்சுத் திருவிழா இறுதிப்போட்டி
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள பேச்சுத் திருவிழா நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முடிவில், தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பேச்சாளர்கள் 18 பேர் சென்னையில் நடக்கும் பிரம்மாண்டமான இறுதிப் போட்டியில் தங்களது பேச்சுத் திறமையை வெளிப்படுத்துகின்றனர்.
திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்று வெற்றியாளர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குகிறார்.
இதில், முதல் பரிசை வெல்வதுடன் தமிழகத்தின் இளம் பேச்சாளர் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்பதை அறிய வருகிற 22, 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 :00 மணிக்கு “பேச்சுத் திருவிழா” நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்.