கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ட்ரெண்டிங் 20” நிகழ்ச்சி

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில்  ட்ரெண்டிங் 20” நிகழ்ச்சி

இன்றைய இளைஞர்கள் கைகளில் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம் சமூக வலைதளங்கள் தான். அரசியல் களம் குறித்த நகைச்சுவையான மீம்ஸ்கள், விளையாட்டு போட்டிகளில் நடந்த சுவார்ஸ்யமான தருணங்கள், வினோதமான செயல்கள் மூலம் ட்ரெண்டான மனிதர்கள், வானத்தில் நிகழ்த்தும் சாகசங்கள், விலங்குகளின் க்யூட் ரீயாக்‌ஷன்ஸ் என வாரம் முழுவதும் சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கும் 20 சுவாரஸ்யமான வீடியோக்களை தொகுத்து நேயர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சிதான் ட்ரெண்டிங் 20. 

அமெரிக்க அதிபர் துவங்கி உள்ளூர் டிக்டாக் பிரபலம் வரை அனைவரும் செய்யும் அட்டகாசமான சுவாரஸ்யமான வீடியோக்களை தொகுப்பாக வழங்குகிறது டிரெண்டிங் 20 நிகழ்ச்சி.

டி20 போட்டிகளை போல சுவாரஸ்யம் குறையாமல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு சமூக வலைதளங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது.இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கிரிஜா .