கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது ‘அச்சரேகை’

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது ‘அச்சரேகை’

சர்வதேச குற்றங்களை அலசும் நிகழ்ச்சி ‘அச்சரேகை’ ! வித்தியாசமான பார்வையில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.குற்றம் என்றால் வெறுமனே தனிப்பட்ட நபரின் விஷயமாக பார்க்கும் வழக்கமான நிகழ்ச்சிகளில் இருந்து விலகி, குற்றத்துக்கு பின் இருக்கும் மனநிலை, சமூக நிலை மற்றும் அரசியல் நிலை காரணிகளை சீர்தூக்கி ஆய்வு செய்கிறது ‘அச்சரேகை’. உதாரணத்துக்கு, காலநிலை மாற்றம் என்பது மனிதக் குற்றமாக பார்க்க முடியுமா? பார்க்க முடியும் என்கிறது அச்சரேகை.

நாம் செய்யும் எல்லா விஷயங்களும், கொள்ளும் நம்பிக்கைகளும், செய்யும் அரசியலும் எங்கோ ஒரு குற்றத்தை எப்படி உருவாக்குகிறது என்பதை சுவாரஸ்யமான ஆக்கத்துடன் சொல்கிறது அச்சரேகை நிகழ்ச்சி! சனி மற்றும் ஞாயிறு மாலை 8.30 மணிக்கு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது ‘அச்சரேகை’ நிகழ்ச்சி. உலகத்தின் தவறுகளை இனம்காண விரும்புவர்கள் இந்நிகழ்ச்சியை தவறவிடமாட்டார்கள்.