கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் 24 மணி நேரமும் வழங்கிகொண்டிருக்கிறது
உலகம் இதுவரை சந்தித்திராத வகையில் கொரோனா தொற்று நோய் பரவிக்கொண்டிருக்கிறது. நோய் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு என்னென்ன வழிமுறைகள், எதனால் கொரோனா நோய் பரவியது, கொரோனாவினால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது போன்ற பல ஆரோக்கியமான விளக்கங்களுடன் செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கிகொண்டிருக்கிறது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி.
இந்த சமயத்தில் உழைத்துக்கொண்டிருக்கும் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி பணியாளர்கள் மிகவும் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் மக்களுக்கு துணையாக பயணித்துக்கொண்டிருக்கிறனர்.
மக்களை அச்சுறுத்தாமல் கொரோனா பற்றிய ஆரோக்கியமான தகவல்களையும், நிகழ்ச்சிகளையும் 24 மணி நேரமும் வழங்கிகொண்டிருக்கிறது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி.