கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ‘மியூசிக் மேட்லி’ புதிய நிகழ்ச்சி
நமது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு இசைத்துக்கொண்டிருக்கும் புதிய நிகழ்ச்சி ‘மியூசிக் மேட்லி’
மக்கள் வாழ்வில் எப்போதும் பிரிக்க முடியாதது இசை. மனதின் ஞாபகங்களை மீட்டெடுக்க, கவலைகளை கலைய இசை என்றுமே உதவி செய்யும். அப்படிப்பட்ட இசையையும், இசை கலைஞர்களையும் கொண்டாடி மகிழும் புத்துணர்ச்சியான நிகழ்ச்சிதான் ‘மியூசிக் மேட்லி’.
பாடகர் மற்றும் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ், பாடகி கங்கா, அனிதா போன்ற இன்னும் பலர் தங்களின் அனுபவங்களை சொல்வதோடு மட்டுமல்லாமல் இசையோடு இணைந்து பாடியும் வருகின்றனர்.இசையை ரசிக்க விரும்புவர்கள் நிச்சயமாக இந்நிகழ்ச்சியை தவறாமல் காணலாம். சனிக்கிழமை தோறும் மாலை 5:30மணிக்கு மியூசிக் மேட்லி இசை நிகழ்ச்சி நமது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் இசைத்துக்கொண்டிருக்கிறது. தொகுப்பாளர் சுமையா இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.