ஜவான் ஒரு உலகளாவிய கொண்டாட்டம் - வெளியான 11 நாட்களில் 800 கோடியைக் கடந்து புதிய சாதனையைப்  படைத்துள்ளது

858.68 கோடி வசூல் செய்து, அதிக வசூல் எனும் மைல்கல்லை மிக வேகமாக கடந்த இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் 'ஜவான்' படைத்துள்ளது!

ComScore இன் படி, Global BO டாப் 10 வார இறுதி அட்டவணையில் ஜவான் 3வது இடத்தில் உள்ளது!

ஜவான் என்ற தடுக்க முடியாத சக்தி- இந்திய பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கியது மட்டுமல்லாமல், வெளிநாட்டு  சந்தைகளையும் புயலாக தாக்கியுள்ளது. இப்படம் வெளியான 11 நாட்களில் 858.68 கோடிகளை குவித்து, 800 கோடி மைல்கல்லை மிக வேகமாக தாண்டிய இந்திய திரைப்படம் என்ற குறிப்பிடத்தக்க சாதனையையும் படைத்துள்ளது!

ஜவானின் உலகளாவிய ஆதிக்கம் இத்துடன் நிறைவடையவில்லை. ComScore அறிக்கையின்படி, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 வார இறுதி அட்டவணையில் இப்படம் 3வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. படத்தின் உலகளாவிய ஈர்ப்பு மற்றும் எல்லை தாண்டிய பார்வையாளர்களை கவரும் திறனுக்கு இது ஒரு சான்றாகும்.

இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள SRK ரசிகர்களுக்கு, Jawan ஒரு சினிமா திருவிழா கொண்டாட்டமாக அமைந்தது. இந்தியாவில், மின்னல் வேகத்தில் 400 கோடியை வசூலித்தும், உலக அரங்கில், 11 நாட்களில் 800 கோடி ரூபாய் வசூல் என்ற மைல்கல்லை எட்டியும் இதுவரையிலான திரையுலக வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது.

"ஜவான்" - பாக்ஸ் ஆபிஸில் அதன் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவது, பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக வல்லுநர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜவான்  இரண்டாவது வார இறுதியில் கூட, படம் பாக்ஸ் ஆபிஸில் வலுவான பிடியைத் தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடதக்கது.

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.