பெரிய கதாநாயகர்கள் படங்கள் எதுவும் தீபாவளிக்கு ரிலீசாகாது என்பது உறுதியாகி உள்ளது.
பெரிய கதாநாயகர்கள் படங்கள் எதுவும் தீபாவளிக்கு ரிலீசாகாது என்பது உறுதியாகி உள்ளது.
தற்போதையை சூழ்நிலையில் எம்.ஜி.ஆர். மகன், பிஸ்கோத், இருட்டு அறையில் முரட்டு குத்து 2, களத்தில் சந்திப்போம் ஆகிய 4 படங்களை தீபாவளி பண்டிகையில் வெளியிட தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எம்.ஜி.ஆர். மகன் படத்தில் சசிகுமார், சத்யராஜ் இணைந்து நடித்துள்ளனர். பொன்ராம் இயக்கி உள்ளார். சந்தோஷ் ஜெயகுமார் நடித்துள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தின் டிரெய்லர் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ஆபாசமாக இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. இது ஏற்கனவே வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. ராஜசேகர் இயக்கிய களத்தில் சந்திப்போம் படத்தில் ஜீவா, அருள்நிதி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். கண்ணன் இயக்கி உள்ள பிஸ்கோத் படத்தில் சந்தானம், தாரா அலிஷா ஜோடியாக நடித்துள்ளனர்.
இந்த நிலையில் வி.பி.எப். கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று பாரதிராஜா அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது