சென்னையில் 'பில்லியனர்ஸ் கிளப்’ தொடக்கம்!

சென்னையில் 'பில்லியனர்ஸ் கிளப்’ தொடக்கம்!
சென்னையில் 'பில்லியனர்ஸ் கிளப்’ தொடக்கம்!
சென்னையில் 'பில்லியனர்ஸ் கிளப்’ தொடக்கம்!
சென்னையில் 'பில்லியனர்ஸ் கிளப்’ தொடக்கம்!
சென்னையில் 'பில்லியனர்ஸ் கிளப்’ தொடக்கம்!
சென்னையில் 'பில்லியனர்ஸ் கிளப்’ தொடக்கம்!

சென்னையில் 'பில்லியனர்ஸ் கிளப்’ தொடக்கம்! Indywood Billionaries Club துபாய், கேரளா, கர்நாடகா, ஹைதராபாத் ஆகிய பகுதிகளிளை தொடர்ந்து சென்னையில் ‘பில்லியனர்ஸ் கிளப்’ புதிய சாப்டர் தொடங்கியுள்ளது.

'இண்டிவுட் பில்லியனர்ஸ் கிளப்' (Indywood Billionaires Club) இந்தியாவில் உள்ள செல்வந்தர்கள் அடங்கிய வலுவான நெட்வொர்க் உருவாக்குவதே இந்த க்ளபின் நோக்கம். 1000 மில்லியன் ரூபாய் அதாவது 100 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதிகளான செல்வந்தர்கள் அடங்கிய க்ளப் தான் ‘பில்லியனர்ஸ் க்ளப்’. இந்த கிளப் நாட்டின் வளர்ச்சியை மறு உருவாக்கம் செய்ய உதவும் என்றும் நிறுவனத் தலைவர்களுக்கு முதலீட்டு வாய்ப்பினை ஏற்படுத்தும். இண்டிவுட் பில்லியனர்ஸ் கிளப் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக வளர்ச்சியடைந்து வருகிறது. துபாய், கேரளா, கர்நாடகா, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் பிராந்திய சாப்டரை அறிமுகப்படுத்தியதை அடுத்து சென்னையில் புதிய சாப்டர் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

2020ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி சென்னையில் உள்ள தாஜ் கன்னிமராவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் தமிழ்நாட்டின் முன்னணி பில்லியனர்கள் பங்கேற்றனர். முன்னணி வணிகத் தலைவர்கள், பெண் தொழில்முனைவோர்கள், வளர்ந்து வரும் இளம் வணிகத் தலைவர்கள் போன்றோர் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டனர். 

பத்மஸ்ரீ டாக்டர் ஜி.பக்தவத்சலம்- கேஜி மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்; எம் லங்கலிங்கம் – லான்சன் குழுமம் தலைவர்; கலைப்புலி எஸ். தாணு – வி கிரியேஷன்ஸ் மற்றும் கலைப்புலி ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்; ஒய்.ஜி. மகேந்திரன் – நடிகர்/இயக்குநர், பத்ம சேஷாத்ரி பால பவன்; ஆர். ஹரிராஜன் – நிர்வாக இயக்குநர், ஐபிஎல் பிராடக்ட்ஸ்; மாஸ்டர் ஸ்ரீ ஜி – நிறுவனர், சத்யோதயம்; சீதா நாகராஜ – நிறுவனர், Cbigs ஜுவல்லரி; அருண் சுரேஷ்– நிறுவனர், எக்செல்லோ குரூப் ஆஃப் கம்பெனிஸ்; சி கே குமரவேல் – சிஇஓ மற்றும் இணை நிறுவனர், நேச்சுரல்ஸ்; நந்த்லால் வாத்வா – நிர்வாக இயக்குநர், வாத்வா வெசர்ஸ்; அனில் கோத்தாரி எஸ் – நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ, ஃபைன் ஷைன் ஜுவல்லரி; ஜி வெங்கட் ராம் – செலிபிரிட்டி & ஃபேஷன் போட்டோகிராபர்;நீனா ரெட்டி – நிர்வாக இயக்குநர், சவேரா ஹோட்டல்; நிகேஷ் லம்பா & ஜப்தேஜ் அஹ்லூவாலியா – பார்ட்னர்கள், டபுள் ரோட்டி; அர்ச்சனா கல்பாத்தி – சிஇஓ, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்; லேனா கண்ணப்பன் – சிஇஓ, 8K மீடியா; மைக்கேல் சூசாய் – இணை நிறுவனர், சிட்ரஸ்; ஷ்ராய் ரத்தா, நிர்வாக இயக்குநர், Rattha Group; அசோக் வர்கீஸ் – இயக்குநர், இந்துஸ்தான் க்ரூப்; சுஹாசினி ஹாசன் – இந்திய திரைப்பட நடிகை; சாஹீர் முனீர் – நிறுவனர் மற்றும் இயக்க்குநர், Divo; எம். ஜோசப் ஜெகன் – நிர்வாக இயக்குநர், செயிண்ட் பீட்டர் & பால் ஃபுட் எக்ஸ்போர்ட்; நித்தின் கல்கிராஜு – சிஇஓ, சுக்ரா ஜுவல்லரி மற்றும் ஹம்சா ரெஸ்டாரண்ட்; செந்தில் குமார் – இணை நிறுவார், க்யூப் சினிமா; சஞ்சய் வாத்வா – நிறுவனர், ஏபி இண்டர்நேஷனல்; சஞ்சல் லுல்லா – நிர்வாக பார்ட்னர், எஸ் எம் லுல்லா க்ரூப் ஆஃப் கம்பெனீஸ்; அமீத் தாமோதர் – நிறுவனர், Chattels Realty; ஸ்ரீதரன் பிள்ளை ஹரிதாஸ் – நிர்வாக இயக்குநர், அக்வா வேர்ல்ட் எக்ஸ்போர்ட்ஸ் ஆகியோர் விருது பெற்றனர்.

இந்த நிகழ்விற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக முதல் முறையாக இண்டிவுட் ஃபேஷன் ப்ரீமியர் லீக் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் IFPL, நிர்வாக இயக்குநர் அபினி சோஹன் ராயினால் பிரத்யேகமாக தேர்வு செய்யப்பட்ட தொகுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது.

IFPL சீசன் 3 நிகழ்வில் இந்தியாவில் உள்ள நெசவாளர் சமூகத்தை ஆதரிப்பதற்காக ‘Walk for a Cause’ மையப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியின் நடன இயக்குநர் தாலு கிருஷ்ணதாஸ். அக்ஷரா ரெட்டி, வித்யா பிரதீப் ஆகியோர் ரேம்ப் வாக் செய்து பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.

இண்டிவுட் பில்லியனர்ஸ் கிளப் குறித்து அதன் நிறுவனர் தொழிலதிபரும், இயக்குனருமான சோஹன் ராய் பேசும்போது,

“இந்திய தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்கள் ஒன்று கூடினால் மட்டுமே இந்திய நாட்டில் மாற்றத்தையும், வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியும் என்றார்.

மேலும் அமெரிக்க டாலரின் மதிப்பை இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்த, ‘மிஷன் 1$=1ரூ’ என்று கொண்டு அதை நோக்கி பயணிக்க இந்த பில்லியனர்ஸ் கிளப் உதவும் என்றார்.

இண்டிவுட் பில்லியனர்ஸ் கிளப் பல்வேறு இந்திய பில்லியனர்களையும் தொலைநோக்கு பார்வைக் கொண்டவர்களையும் இணைத்துக்கொண்டு தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. இந்திய சினிமா பொருளாதாரத்தில் முறையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இந்தக் கிளப் 2016ம் ஆண்டு ஹைதராபாத்தின் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொச்சி சாப்டர் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதியும் துபாய் சாப்டர் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ம் தேதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல் கேரளா சாப்டர் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதியும் கர்நாடகா சாப்டர் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதியும் ஹைதராபாத் சாப்டர் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இண்டிவுட் பில்லியனர் கிளப் ஒரு டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. இதை சாத்தியப்படுத்த பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பகுதிகளை இந்தக் கிளப் கண்டறிந்துள்ளது.

அனைத்து துறைகளிலும் EFFISM (Efficiency Improvement System Management) செயல்படுத்துவது ஒன்றே இதற்கான தீர்வாகும். இதை வடிவமைத்தது Aries குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவான AIMRI. இந்தியாவை திறமையான மனித வளங்கள் கொண்ட பகுதியாக மாற்றியமைக்க பிளாக் செயின் கான்செப்டில் ஒட்டுமொத்த பில்லியனர் சமூகத்தையும் ஒன்றிணைக்க விரும்புகிறது IBC. இந்நிகழ்வில் எஜுகேஷன் 3டி தியேட்டருடன் இணைந்து EFFISM ஒரு சிறப்பு விளக்கப்படத்தை காட்சிப்படுத்தியது.