உலகம் முழுவதும் பல்வேறு இதயங்களை கொள்ளைகொள்ள வருகிறது "How to Train Your Dragon: The Hidden World"

உலகம் முழுவதும் பல்வேறு இதயங்களை கொள்ளைகொள்ள வருகிறது "How to Train Your Dragon: The Hidden World"
உலகம் முழுவதும் பல்வேறு இதயங்களை கொள்ளைகொள்ள வருகிறது "How to Train Your Dragon: The Hidden World"
உலகம் முழுவதும் பல்வேறு இதயங்களை கொள்ளைகொள்ள வருகிறது "How to Train Your Dragon: The Hidden World"

யுனிவர்சல் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ட்ரீம்வொர்க்ஸ் அனிமேஷன், ஹிக்கப் டூத்லெஸ் மற்றும் அவர்களது வழக்கத்திற்கு மாறான நட்பின் புதிய அவதாரமான - How to Train Your Dragon: The Hidden World வெளியிட்டினை அறிவித்துள்ளது. இந்த வரிசையின் மூன்றாவது பாகமான இது, உலகம் முழுவதும், பல்வேறு வயதினரின் இதயத்தை கொள்ளை கொண்டதாகும் மற்றும் இந்தியாவில் இத்திரைப்படம் மார்ச் 22 அன்று, 2D, 3D மற்றும் IMAX வடிவங்களில் வெளியாகவுள்ளது. How to Train Your Dragon: The Hidden World திரையரங்குகளில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

How to Train Your Dragon வளருதல், அறியாதவற்றை எதிர்கொள்ளும் தைரியத்தை கண்டறிதல் மற்றும் எப்படி நீங்கள் பயிற்சியளிப்பது எப்போதும் உங்களை கைவிடாது என்பதை வெளிபடுத்தும் ஒரு ஆச்சரியமூட்டும் கதையாகும். இத்திரைப்படம், வளர்இளம் பருவத்திலுள்ள வைக்கிங் மற்றும் அபாயகரமான நைட் பியூரி டிராகன் இடையிலான நட்புடன் துவங்கிய சாகசங்கள் நிறைந்த அவர்களது வாழ்க்கை கதையாகும், திரைப்பட வரலாற்றின், மிகவும் விரும்பப்படும் அனிமேஷன் செய்யப்பட்ட பிரான்சிஸின் மற்றுமொரு அற்புதமான அத்தியாயமான How to Train Your Dragon: The Hidden World -க்கு உங்களை வரவேற்கிறோம்.

தற்போதைய தலைவரும் மற்றும் ஆட்சியாளருமான பெர்க், ஆஸ்ட்ரிக், ஹிக்கப் உடன் இணைந்து டிராகன் பயம் கொண்டிருந்த யுடோபியாவை தலைகீழான மாற்றுகின்றனர். தீடிரென்று ஒரு பெண் லைட்ப்யூரி தோன்றுகிறது, அவர்களது கிராமம் இதுவரை சந்தித்திராத அச்சுறத்தலை அளிக்கிறது. ஹிக்கப் மற்றும் நைட்பியூரி இதுநாள் வரை அவர்கள் அறிந்திராத ஒரே இல்லமான அவர்களது கிராமத்தை விற்று வெளியேறி, கற்பனை கதைகளில் மட்டுமே அறிந்திருந்த ஒரு மறைந்த உலகை நோக்கி பயணிக்கின்றனர். அவர்களது உண்மையான காரண காரியங்கள் தெரியவருகின்றன. டிராகன் மற்றும் ரைடர் இணைந்து போராட வேண்டும் - பூமியின் இறுதி வரை -- அவர்கள் காத்த, வளர்த்த அனைத்தையும் காக்க.

How to Train Your Dragon: The Hidden World, தொடர் இயக்குனர் டீன் டிபிளாய்ஸ், ஆல்- ஸ்டார் நட்சத்திர பட்டாளத்துடன் இணைகின்றனர். இத்திரைப்படம் பிராட் லூயிஸ் ( Ratatouille, ANTZ) மற்றும் போனி அர்னால்ட் ( Toyt Story, How to Train Your Dragon, How to Train Your Dragon 2)| ஆகியோரால் தயாரிக்கப்படுகிறது.