கடவுளும் நானும் ராஜீவ் மேனன் மதன் கார்க்கி இணைந்து உருவாக்கிய புதிய தமிழிசைப் பாடல்
கடவுளும் நானும்
ராஜீவ் மேனன் மதன் கார்க்கி இணைந்து உருவாக்கிய புதிய தமிழிசைப் பாடல்
மார்கழி மாத இசை விழாக்களில் பெரும்பாலும் பழந்தமிழ்ப் பாடல்களே பாடப்படுகின்றன. இந்த ஆண்டு இயக்குநர் ராஜீவ் மேனனும் பாடலாசிரியர் மதன் கார்க்கியும் இணைந்து புதிய தமிழ்சைப் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
‘கடவுளும் நானும்’ எனும் தலைப்பில் அந்தப் பாடல் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகிறது.
இயக்குநர் ராஜீவ் மேனன் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய இசையமைப்பில் சர்வம் தாளமயம் படத்தில் ‘வரலாமா உன்னருகில்’ எனும் பாடல் வெளியாகி இசை இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் மதன் கார்க்கி திரைப்படப் பாடல்கள் அல்லாது நூற்றுக்கணக்கான தனியிசைப் பாடல்களையும் வெளியிட்டுள்ளார்.
இவர்கள் கூட்டணியில் உருவாகி வெளியாகும் ‘கடவுளும் நானும்’ எனும் பாடல் கடவுளுக்கும் மனிதனுக்குமான நெருக்கத்தைப் பற்றி பாடுகிறது. இந்தப் பாடலுக்கு ராஜீவ் மேனன் காம்போஜி ராகத்தில் மெட்டமைத்துள்ளார்.
இந்தப் பாடல் மைலாப்பூரில் நடந்த ஒரு இசை விழாவில் முதன்முதலாக அரங்கேற்றப்பட்டது.
இப்போது இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகிறது.
இதே போல் இன்னும் பல தமிழிசைப் பாடல்களை ராஜீவ் மேனனும் மதன் கார்க்கியும் உருவாக்கி வருகிறார்கள்.
தன்னுடைய ஒளிப்பதிவுக்கென்றே பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டவர் ராஜீவ் மேனன். இந்தப் பாடலுக்கான ஒளிப்பதிவை ராஜீவ்மேனனும் அவருடைய மைண்ட் ஸ்கிரீன் திரைப்பட கல்லூரி ஒளிப்பதிவு மாணவர்களும் இணைந்து செய்துள்ளனர்.
இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்ககளில் உள்ள இயற்கைக் காட்சிகளை பாடல் வரிகளுக்கேற்ப படம் பிடித்துள்ளனர்.
டிவோ இசைத் தளத்திலும் வெவ்வேறு இசை சீரோட்டத் தளங்களிலும் இந்தப் பாடல் வெளியாகிறது.