எழுமின் பிரபலம் கணேஷ் சந்திரசேகரனின் இசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாடல் 

எழுமின் பிரபலம் கணேஷ் சந்திரசேகரனின் இசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாடல் 

இளம் இசைப் அமைப்பாளர்களில் ஒருவரான 'கணேஷ் சந்திரசேகரன்' எழுமின் படத்தின் மூலம் அறிமுகமாகி நம்மை தன் இசையில் தனுஷ், அனிருத் மற்றும் யோகி B போன்ற பிரபல கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களை தன் பாட்டுக்கும் பாட வைத்து நமக்கு  இசை விருந்து அளித்தவர், இப்போது அடுத்த படைப்பான single track மூலம் நம்மை மறுபடியும் உற்சாக படுத்த வருகிறார். 

இம்முறை நம்ம சென்னையின் பெருமையான Chennai Super Kings காக single track #ChennaiSuperKingsda என தொடங்கும் பாடல். இதை அவரே எழுதி, சூப்பர்சிங்கர் பிரபலமான சாய் விக்னேஷ், தனுஜ் மேனன் மற்றும் ராஜேஷ் கிரி பிரசாத் பாடி உள்ளனர் மேலும் பத்து குழந்தைகளும் கோரஸ் பாடி உள்ளார்கள். இதை வசந்த் தன்னுடைய ஆடியோ கம்பெனியான Vasy Music மூலம் தயாரித்துள்ளார். 

இதை பற்றி இசையமைப்பாளரிடம் கேட்கும் போது, கிரிக்கெட் தன் வாழ்வில் பெரும் அங்கமாக இருந்ததனால் தான், என்னால் இந்த பாடலை பண்ண முடிந்தது, மற்றும் என்னால் பாடலையும், கிரிக்கெட்டையும் ஒன்று சேர்க்க முடிந்தது. இந்த பாடல் கண்டிப்பாக எல்லோரு மனதிலும் இடம் பிடிக்கும். இதை கோலிவுட் பிரபலங்கள் பத்மஸ்ரீ விவேக் சார், பியூட்டி குயின் ஐஸ்வர்யா ராஜேஷ், கனா வெற்றி பட இயக்குனர் மற்றும் கவிஞருமான அருண்ராஜா காமராஜ் இதனைப் பாராட்டி இந்த ஆல்பத்தை அவர்களது ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டார்கள்...