இயக்குனர் பாரதிராஜா தலைவராக தேர்வு!

இயக்குனர் பாரதிராஜா தலைவராக தேர்வு!

தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவராக, இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார், இதற்கு முன்பு இயக்குனர் விக்ரமன் தலைவராக இருந்து வந்தார், அவர் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து பாரதிராஜா தேர்வாகியுள்ளார்.

தலைவராக தேர்வானது பற்றி இயக்குனர் பாரதி ராஜா கூறியதாவது: "எதையாவது சாதிக்க வேண்டும் என்று இயக்குனர் சங்க தலைவராக தேர்வாகி இருக்கிறேன், இதில் எனக்கு மகிழ்ச்சி, என் சிஷ்யன் கே.பாக்யராஜ், நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார், அவர் வெற்றி பெற்றால் மகிழ்ச்சியடைவேன்" என்றார்.