சமீபத்தில் ஓய்வு பெற்ற தோனி, அடுத்ததாக சினிமா துறையில் கவனம்

சமீபத்தில் ஓய்வு பெற்ற தோனி, அடுத்ததாக சினிமா துறையில் கவனம்
சமீபத்தில் ஓய்வு பெற்ற தோனி, அடுத்ததாக சினிமா துறையில் கவனம்

சமீபத்தில் ஓய்வு பெற்ற தோனி, அடுத்ததாக சினிமா துறையில் கவனம் 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் தோனி ஓய்வுக்குப் பின்னர், அடுத்ததாக சினிமா துறையை தேர்வு செய்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்த தோனி, அந்த நிறுவனத்தின் சார்பில் ஒருசில டாக்குமெண்டரி படங்களை எடுத்துள்ளார். 

அடுத்ததாக வெப் தொடர் ஒன்றை தயாரிக்க அவர் முடிவு செய்துள்ளாராம். இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தோனியின் மனைவியுமான சாக்‌ஷி கூறியபோது, ‘அறிவியல் சம்பந்தமான நாவல்களின் அடிப்படையில் வெப் தொடர்களை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ள அவர், விரைவில் இந்த வெப் தொடரில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனர் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் தோனி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஒரே நேரத்தில் 5 புதிய வெப்தொடர்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக சாக்‌ஷி தோனி கூறியுள்ளார்.