‘டெவில்’ விமர்சனம்

‘டெவில்’ விமர்சனம்
‘டெவில்’ விமர்சனம்

‘டெவில்’ விமர்சனம்

மனைவியை நேசிக்காத கணவன், அதனால் வேறு ஒரு ஆணின் பரிசத்திற்கு அடிமையாகும் மனைவி, இவர்களின் வாழ்க்கையில் டெவிலாக நுழையும் அந்த மூன்றாவது மனிதனால் இவர்களின் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது, என்பதை சொல்வது தான் ‘டெவில்’ படத்தின் கதை.

விதார்த், பூர்ணா மற்றும் திருகுண் மூன்று பேருமே கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள். படத்தின் பெரும்பகுதியை தன் தோள் மீது சுமந்திருக்கும் நடிகை பூர்ணா, அனைத்துவிதமான உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்.  மொத்தத்தில், ஆரம்ப காட்சி முதல் கடைசி காட்சி வரை பூர்ணாவின் நடிப்பு கொடிக்கட்டி பறக்குது.

பூர்ணாவின் கணவராக நடிச்ச விதார்த், ஒரு சாதாரண வேடம் என்றாலும், கிடைச்ச வாய்ப்பை சரியா பயன்படுத்தி நடிச்சிருக்கார். அதிலும் சில காட்சிகளில் அவர் நடிப்பு சூப்பரோ சூப்பர்.

திருகுணுக்கு காட்சிகள் குறைவு என்றாலும் நடிப்பில் குறையில்லை.

கார்த்திக் முத்துகுமாருக்கு பெரும்பாலும் இரவு நேர காட்சிகள் தான். அதை அப்படியே ரசிக்குமறமாதிரி படமாக்கியது பாராட்டுக்குறியது.

யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு இசையில் மிரட்டியிருக்கிறார் மிஷ்கின். படத்தில் வசனம் குறைவு. பின்னணி இசைக்கு தான் முக்கியத்துவம் இருக்கு என்பதை உணர்ந்து அருமையாக இசையமைத்திருக்கார்.

ஒரு சாதாரன கதையை ரொம்ப சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் இளையராஜா.

தம்பதிகளுக்கு அறிவுரை சொல்லும் படமாக இருந்தாலும் அதை கமர்ஷியலாகவும், கவனம் ஈர்க்கும் வகையிலும் இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஆதித்யா.

- சென்னை பத்திரிக்கா சிவாஜி