’சிக்லெட்ஸ்’ விமர்சனம்

’சிக்லெட்ஸ்’ விமர்சனம்
’சிக்லெட்ஸ்’ விமர்சனம்

’சிக்லெட்ஸ்’ விமர்சனம்

பிள்ளைகளின் மீது பெற்றோர்கள் திணிக்கும் கனவு. பிள்ளைகளோ வயதுக்கு ஏற்ற சந்தோஷங்களை அனுபவிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இறுதியில், பெற்றோர்களின் கனவுகளை பிள்ளைகள் புரிந்துக்கொண்டார்களா? அல்லது பிள்ளைகளின் மனதை பெற்றோர்கள் புரிந்துக்கொண்டார்களா? என்பது தான் ‘சிக்லெட்ஸ்’ படத்தின் கதை.

முக்கியமான கதாபாத்திரங்களில் நடிச்ச நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா எலாருமே கதாபாத்திரத்தை உணர்ந்து நடிச்சிருக்காங்க. வயது கோளாறு காரணமா, அவங்க வாழ நினைக்கிற வாழ்க்கை, உடல் மொழி, கவர்ச்சின்னு படம் முழுக்க மாக நெடியை தூவியிருக்காங்க.

மூணு பொண்ணுங்களையும் காதலிக்கிற இளைஞர்களா நடிச்ச, சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ஆரோன் எல்லாரும் இன்னைக்கு இருக்கிற வயசு பங்க மாதிரி அப்படியே நடிச்சிருக்காங்க.

மூனு பொண்ணுங்களுடைய பெற்றோர்களாக நடிச்சிருக்குற சுரேகா வாணி,  ஸ்ரீமன், ராஜகோபாலன் மற்றும் பாட்டியாக நடிச்ச நடிகை எல்லாரும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். 

ஒளிப்பதிவு செஞ்ச குளச்சி குமார், பெண்களின் அழகை அப்படியே அள்ளி கொடுத்திருக்காரு. பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் எல்லாமே அருமை. அதிலும், பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப இருக்கிறது.

இன்னிக்கு இருக்குற வயது பிள்ளைங்கள எப்படி வளர்க்கனும் என்று சொல்லும் ஒரு படமாக இருக்கு. ஒரு அட்வைஸ் படமா இருந்தாலும், இது எல்லோருக்குமான படம் மட்டுமில்லை, ஒரு பாடமா எடுத்த இயக்குநரை முத்துவை தாராளமாக பாராட்டலாம்.

- சென்னை பத்திரிக்கா சிவாஜி