கோடையை குளிரவைக்க வருகிறது விஜய் தேவரகொண்டா - பூஜா ஜாவேரி நடித்த “ அர்ஜூன் ரெட்டி ”
![கோடையை குளிரவைக்க வருகிறது விஜய் தேவரகொண்டா - பூஜா ஜாவேரி நடித்த “ அர்ஜூன் ரெட்டி ”](http://chennaipatrika.com/entertainment/uploads/images/image_750x_5cb711ec7f78f.jpg)
கோடையை குளிரவைக்க வருகிறது விஜய் தேவரகொண்டா - பூஜா ஜாவேரி நடித்த “ அர்ஜூன் ரெட்டி ”
விஜய் தேவரகொண்டா - பூஜா ஜாவேரி நடித்து தெலுங்கில் துவாரகா என்ற பெயரில் வெளியாகி வெற்றியடைந்த படத்தை ஸ்ரீ லக்ஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் படநிறுவனம் சார்பாக A.N.பாலாஜி தமிழில் தயாரித்துள்ள “அர்ஜூன் ரெட்டி “ படம் இந்த மாதம் 26 ம் தேதி வெளியாக உள்ளது.
மற்றும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க காமெடி கலந்த திரைக்கதை அனைவரையும் ரசிக்க வைக்கும். கோடைக்கு இதமாக இந்த அர்ஜுன்ரெட்டி இருக்கும். நெல்லை பாரதியின் பாடல்கள் ஓவொன்றும் ஒருவிதம் அனைத்தும் ரசிக்க வைக்கும் என்கிறார் A.N.பாலாஜி.
ஒளிப்பதிவு - ஸ்யாம் கே.நாய்டு
இசை - சாய்கார்த்திக்
பாடல்கள் - நெல்லை பாரதி
எடிட்டிங் - பிரேம்
தயாரிப்பு - A.N.பாலாஜி