நடிகை குஷ்பு அவர் அழகின் ரகசியத்தை வெளியிட்டார்

நடிகை குஷ்பு அவர் அழகின் ரகசியத்தை வெளியிட்டார்

கொரோனா ஊரடங்கினால் இரண்டு மாதங்களாக வீட்டில் முடங்கி உள்ள நடிகர்-நடிகைகள் சமையல் செய்வது, உடற்பயிற்சி, யோகா, புத்தகங்கள் படித்தல், டிஜிட்டல் தளத்தில் படங்கள் பார்த்தல், ஓவியம் வரைதல் என்று நேரத்தை கழிக்கின்றனர். அந்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறார்கள். சிலர் ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடுகின்றனர்.

இந்த வரிசையில் நடிகை குஷ்பு வீட்டில் பாரம்பரிய முறையில் தயாரித்த அழகு பொருட்களை தனது முகத்தில் பூசிக்கொண்டு, அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தின் கீழ் அழகு குறிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

அவரது பதிவில், “முகத்துக்கு போடும் இந்த ‘பேஸ்பேக்கை’ எனது மகள்கள் குழந்தைகளாக இருக்கும்போதில் இருந்தே சோப்புக்கு பதிலாக பயன்படுத்துகிறேன். இதற்கு தேவையான பொருட்கள் தயிர், மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தேன், கடலை மாவு, காய்ச்சிய பாலில் கொஞ்சம் குங்குமப்பூவையும் ஊறவைக்க வேண்டும். இவற்றை ஒன்றாக கலந்தால் முகத்தில் பூசும் அழகு பொருள் தயாராகிவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றவர்கள் சொல்லும் அழகு குறிப்புகளைவிட குஷ்பு சொல்லும் அழகு குறிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், உங்கள் அழகுக்கு இதுதான் காரணமா? என்றும் பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.