நடிகர் விவேக் வேதனை - புனிதர்கள் வாழ்ந்த பூமி கற்பழிப்பு, கொலை

 நடிகர் விவேக் வேதனை - புனிதர்கள் வாழ்ந்த பூமி கற்பழிப்பு, கொலை
நடிகர் விவேக் வேதனை - புனிதர்கள் வாழ்ந்த பூமி கற்பழிப்பு, கொலை

 நடிகர் விவேக் வேதனை - புனிதர்கள் வாழ்ந்த பூமி கற்பழிப்பு, கொலை

 

திருவள்ளூவர்,திருமூலர், விவேகானந்தர், வள்ளலார் ஆகிய புனிதர்கள் வாழ்ந்த பூமியில் பலாத்கார கொலைகள் நடைபெறுவதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் ஹத்ராஸ்வில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. திருப்பூரில் வட இந்திய பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவமும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

இதனிடையே புலம்பெயர் தொழிலாளர் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், புனித பூமியான இந்தியா பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிஷ்டவசமானது என்றும் நீதிபதிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் விவேக், பாலியல் வன்கொடுமை பற்றி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அன்பே சிவம்- திருமூலர்; அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?- திருவள்ளுவர்; ஜீவகாருண்யமே மோட்சத் திறவுகோல்-வள்ளலார் எல்லாவற்றுக்கும் மேல் அன்பு- விவேகானந்தர். இப்படிப்பட்ட புனிதர்கள் வாழ்ந்த பூமியில்- கற்பழிப்பு, கொலை என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.