நடிகர் ஆர்யா - சாயி‌ஷா திருமண தேதி அறிவிப்பு!

நடிகர் ஆர்யா - சாயி‌ஷா திருமண தேதி அறிவிப்பு!

தமிழில் பிரபல நடிகரான ஆர்யா நடிகை சாயி‌ஷாவை திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

"அறிந்தும் அறியாமலும்", நான் கடவுள், மதராசபட்டணம் போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகர் ஆர்யா இவர் வனமகன், கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்த சாயி‌ஷாவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவரும் "கஜினிகாந்த்" என்ற தமிழ் படத்தில் ஜோடியாக நடித்தனர், அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தாக கூறப்படுகிறது.

ஆர்யாவுக்கும், சாயி‌ஷாவுக்கும் வருகிற மார்ச் மாதம் 10-ந் தேதி திருமணம் நடக்க உள்ளதாகவும், ஐதராபாத்தில் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.