தன் பிறந்தநாளை புதுமையான முறையில் கொண்டாடிய நடிகர் ஆரி

சமுதாயத்திற்கு பல நல்ல செயல்களை செய்து வரும் ஆரி தனது பிறந்தநாளை இன்று (12-02-19) கொண்டாடினார். தற்போது, காதலின் உயர்வை சொல்லும் 'அலேகா' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. படக்குழுவினர் அவரது பிறந்த நாளுக்காக 5 கிலோ எடையுள்ள கேக்கை தயார் செய்திருந்தனர். ஆனால், இயற்கை உணவுக்கு முன்னுரிமை தரும் ஆரி, கேக் என்பது இயற்கை உணவு வகையை சார்ந்தது கிடையாது என்று கூறி படப்பிடிப்புத் தளத்தில் உள்ள அனைவருக்கும் இளநீர் கொடுத்து தனது பிறந்த நாளை கொண்டாடினார். உடன் ஐஸ்வர்யா தத்தாவும் இருந்தார்.

இப்படத்தை க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ்-ன் பி.தர்மராஜ் மற்றும் கிரியேட்டிவ் டீம்ஸ்-ன் இ.ஆர்.ஆனந்தன் தயாரிக்கிறார்கள். 'அய்யனார்' புகழ் எஸ்.எஸ்.ராஜா மித்ரன் இயக்குகிறார். இசை - சத்யா, ஒளிப்பதிவு - தில் ராஜ், படத்தொகுப்பு - கார்த்திக் ராம், பாடல்கள் - யுகபாரதி, விவேகா மற்றும் லாவரதன்.