என்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்

என்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்
என்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்
என்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்

Directed by   : Gautham Menon
Produced by : Ishari K. Ganesh,Gautham Menon,Venkat SomasundaramReshma Ghatala
Written by     : Gautham Menon
Starring         : Dhanush,Megha Akash
Music by        : Darbuka Siva
Cinematography       :  Jomon T. John,Manoj, Paramahamsa,S.R. Kathir
Production company :Ondraga Entertainment,Vels Film International
Distributed by            : Vels Film International
Release date             : 29 November 2019
Language                  :  Tamil

தனுஷ் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கேங்ஸ்டர் கும்பலிடம் குண்டடிப்பட்டு தப்பிக்கின்றார், அதை தொடர்ந்து அவரின் வாய்ஸ் ஓவராகவே படம் செல்கின்றது.

கல்லூரியில் தனுஷ் படிக்கும் போது அவருடைய கல்லூரிக்கு ஷுட்டிங் எடுக்க ஒரு படக்குழுவினர்கள் வருகின்றனர், அப்படத்தின் ஹீரோயினாக மேகா ஆகாஷ், விருப்பமில்லாமல் நடிக்கின்றார்.

இவரை வற்புறுத்தி அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் நடிக்க வைக்கின்றனர், அவருக்கு மேகா மேல் ஒரு ஆசையும் கூட. இந்த நேரத்தில் தனுஷுடன் மேகா காதலில் விழ, இவர்கள் காதல் தெரிந்து அந்த இயக்குனர் மிரட்டி மேகாவை அழைத்து செல்கின்றார்.

இதோடு அவ்வளவு தான் என்று நினைக்க, 4 வருடத்திற்கு பிறகு மேகாவிடம் இருந்து தனுஷிற்கு ஒரு கால், அதில் உன் அண்ணன் என்னை காப்பாற்றினார், அவருக்கு பிரச்சனை நீ உடனே வா என்று சொல்ல, அதன் பிறகு ஏற்படும் திருப்பங்களே அடுத்தடுத்த காட்சிகள்.

தனுஷ் நடிப்பை பற்றி இனி குறை சொல்வதற்கு இல்லை, ஆனாலும், கௌதம் பட நாயகனாக தனுஷ் செட் ஆவாரா என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. ஆனால், சில நேரம் கொஞ்சம் செயற்கையாக இருந்தாலும், படத்திற்கு தனுஷ் வழக்கம் போல் நம்மை கொண்டு செல்கின்றார், மேகாவுடன் காதல், அண்ணனை காப்பாற்ற துடிக்கும் தம்பி, இனி ஒன்னுமே இல்ல, வாங்கடா என சவால் விடும் இடம் என தனுஷ் ஒவ்வொரு பந்தும் சிக்ஸர் தான்.

படத்தின் மிகப்பெரிய பலம் தர்புகா சிவாவின் இசை, பின்னணி பாடல் என்று முத்திரை பதித்துள்ளார். ஒளிப்பதிவும் கௌதம் படத்தில் சொல்லியா தெரிய வேண்டும், ஒவ்வொரு ப்ரேமும் அழகு, அதோடு மறுவார்த்தை பேசாதே பாடல் தியேட்டரே அதிர்கின்றது.

தனுஷ் நடிப்பு, மேகா-தனுஷ் காதல் காட்சிகள்.படத்தின் வசனம் ‘இவ்ளோ அழக தேடி போனதில்லை, உன் முகத்தை தாண்டி யோசிக்க முடியவில்லை’ ’ஆண் அப்பப்போ மிருகமா நடந்துக்கொள்வான், அப்படி தான் நானும்’ போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கின்றது.

படத்தின் இசை, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்.படத்தில் வரும் வாய்ஸ் ஓவர், நமக்கு ஒரு சமயத்தில் தலை வலியை உண்டாக்குகின்றது.

இரண்டாம் பாதி அச்சம் என்பது மடமையடா பீல் மிகவும் வந்து செல்கின்றது, நிறைய விஷயங்கள் சுற்றி சுற்றி வந்து என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்று யோசிக்க வைக்கின்றது.

மொத்தத்தில் கௌதம் மேனனின் வழக்கமான கதை என்ற தோட்டாவை தனுஷ் என்ற புதிய துப்பாக்கியில் வைத்து பாயவிட்டுள்ளனர்.