நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’-க்கு பூஜை போட்ட ஆர்.ஜே.பாலாஜி!

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன்' படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று (நவ.29) தொடங்கின.கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் நடந்த பூஜைக்குப் பிறகு நாகர்கோவிலில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 29) துவங்கியதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நயன்தாரா விரைவில் இணையவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘அவள்’ படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளரும், தற்போது நயன்தாரா நடித்து வரும் 'நெற்றிக்கண்' படத்தின் இசையமைப்பாளருமான கிரிஷ் கோபாலகிருஷ்ணன் 'மூக்குத்தி அம்மன்' படத்துக்கு இசையமைக்கிறார்.

'தானா சேர்ந்த கூட்டம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் கிருஷ்ணன் கேமராவைக் கையாள, ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். 'பரியேறும் பெருமாள்' படப்புகழ் ஆர்.கே.செல்வா படத்தொகுப்பை கவனிக்கிறார்.

நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி, 'மூக்குத்தி அம்மன்' படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதியிருப்பதுடன் என்.ஜே.சரவணனுடன் இணைந்து படத்தையும் இயக்குகிறார். 'எல்.கே.ஜி.', 'கோமாளி', மற்றும் 'பப்பி' ஆகிய ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து ஐசரி கே.கணேஷ் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.