அக்னி சிறகுகள்: வித்தியாச விஜய் ஆண்டனி

அக்னி சிறகுகள்: வித்தியாச விஜய் ஆண்டனி

சென்னை: விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் அக்னிச் சிறகுகள் படத்தின் கேரக்டர் லுக் வெளியாகியுள்ளது.

மூடர்கூடம், அலாவுதினும் அற்புத கேமராவும் உள்ளிட்ட படங்களை இயக்கிய நவீன் இயக்கத்தில் அக்னிச் சிறகுகள் உருவாகி வருகிறது.

தற்போது, சீனு கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் வித்தியாசமான லுக் வெளியாகியுள்ளது.

அக்னிச் சிறகுகள் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் அக்னிச் சிறகுகள் படம் உருவாகி வருகிறது.

அப்துல் கலாம் எழுதிய அக்னிச் சிறகுகள் புத்தகம் இளைஞர்களின் எழுச்சிக்காக எழுதப்பட்ட நிலையில், அந்த தலைப்பில் இந்த படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. டி. சிவா தயாரித்து வரும் இந்த படத்தில் அக்‌ஷரா ஹாசன், நாசர் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.