அம்பேத்கர் சிலை விவகாரம்: பிரபல நடிகர் கருத்து

அம்பேத்கர் சிலை விவகாரம்: பிரபல நடிகர் கருத்து
அம்பேத்கர் சிலை விவகாரம்: பிரபல நடிகர் கருத்து

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் அம்பேத்கர் சிலை ஒரு பிரிவினரால் சேதம் செய்யப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 50 பேர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சேதம் செய்யப்பட்ட சிலைக்கு பதிலாக மாற்று சிலை வைக்கப்பட்டுவிட்டாலும், சிலையை சேதம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.                                                                                 இந்த நிலையில் அம்பேத்கர் சிலை விவகாரம் குறித்து பிரபல காமெடி நடிகர் விவேக் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது: பெரும் தலைவர்களின் சிலைகள் அவர்கள் தந்த தத்துவத்தின் சேவையின் வடிவங்கள்.அதை சிதைப்பது அறிவீனம். ஊர் தூற்றும். இளையோர், மரம் நடுதல், குளம், ஏரி தூர்வாருதல், ஏழை மாணவர் கல்விக்கு உதவுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் ஊர் போற்றும். அன்பு பரப்புவோம்; உலகை அன்பால் நிரப்புவோம்.

நடிகர் விவேக்கின் இந்த டுவீட்டுக்கு நெட்டிசன்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.