அசுரன் - விரைவில் முன்னோட்டம் & பாடல்கள் !
அசுரன் - விரைவில் முன்னோட்டம் & பாடல்கள் !
V creations சார்பில் கலைப்புலி S தாணு தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'அசுரன் ' .
இப்படத்தினை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியார் தனுஷுடன் இணைத்து கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார் .
இப்படத்தில் பசுபதி , பாலாஜிசக்திவேல் , சுப்ரமணியம் சிவா, ஆடுகளம் நரேன் , பவன் ,அம்மு அபிராமி , கென் கருணாஸ் ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர் .
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் G V பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாக இருக்கும் அசுரன் படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது !