பிக்பாஸ் வீட்டில் மேலும் 4 சிறப்பு விருந்தினர்கள்

பிக்பாஸ் வீட்டில் மேலும் 4 சிறப்பு விருந்தினர்கள்
பிக்பாஸ் வீட்டில் மேலும் 4 சிறப்பு விருந்தினர்கள்

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக முதல் மற்றும் இரண்டாம் சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்கள் விருந்தினராக வருகை தந்து கொண்டிருந்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு 4 சிறப்பு விருந்தினர்கள் வருகை தந்துள்ளனர். ரேஷ்மா, மீராமிதுன், மோகன் வைத்யா மற்றும் பாத்திமா பாபு ஆகிய நால்வர் பிக் பாஸ் வீட்டுக்குள் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்துள்ளனர். அவர்களை வெகு உற்சாகமாக போட்டியாளர்கள் வரவேற்கின்றனர். 

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இருப்பதால் சிறப்பு விருந்தினர்கள் நால்வர் வந்திருந்ததால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் மீரா இருந்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையை கிளப்பி கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் இன்றும் அவர் ஏதாவது பிரச்சனையை கிளப்புவாரா? அல்லது அமைதியாக திரும்புவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.