போனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும் 46 வயது நடிகை - பாலிவுட்டில் பரபரப்பு!

போனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும் 46 வயது நடிகை - பாலிவுட்டில் பரபரப்பு!
போனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும் 46 வயது நடிகை - பாலிவுட்டில் பரபரப்பு!

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் தன்னை விட 12 வயது பெரியவரான நடிகை மலாய்கா அரோராவை காதலிக்கிறார். நடிகர் அர்பாஸ் கானை விவாகரத்து செய்த மலாய்காவுக்கு 16 வயதில் மகன் உள்ளார்.

ஷாருக்கானின் உயிரே திரைப்படத்தில் இடம்பெற்று தக்க தய்ய தய்யா பாடல் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுகமான ஒன்று. அந்த பாடலில் ரயிலில் இடுப்பை வளைத்து நெளித்து ஆடியவர் மலாய்கா அரோரா. இவர் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி. 

இவர் 1998-ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கானைத் திருமணம் செய்தார். 2017-ல் இருவரும் பிரிந்தார்கள். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. அவர் மலாய்காவிடம் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் மலாய்கா போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூருடன் காதலில் விழுந்தார். பின்னர் அடிக்கடி டேட்டிங் சென்று வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக முடிவெடுத்துள்ளார்களாம்.  

இது குறித்து டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  மலாய்கா   "என்னுடைய திருமணம் அழகிய கடற்கரையில் தான் நடைபெறும். லெபனான் நாட்டை சேர்ந்த டிசைனர் Elie Saab செய்யும் pristine gownயை தான் நான் அணிந்துகொள்வேன்' என மகிழ்ச்சியுடன் கூறியுளளார்.